Breaking News

ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது.

அதில் அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.

இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்படம் குறித்து ஆக்கப்பூர்வமாக விமர்சனம் எழுதிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து மணிரத்னம் கடிதம் எழுதியுள்ளார்.