Breaking News

மணிரத்னம் படத்துக்கு தணிக்கை குழுவில் சிக்கல்!

மணிரத்னத்தின் ‘‘ஓ காதல் கண்மணி’’ படத்துக்கு தணிக்கை குழுவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.வருகிற 17திகதி இப்படம் வெளிவர உள்ளது.

இதையடுத்து தணிக்கை குழுவுக்கு ‘‘ஓ காதல் கண்மணி’’ படத்தை அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் கரு ‘யு’ சான்றுக்கு உகந்ததாக இல்லை என தெரிவித்தனர்.

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் கலாசாரம் மற்றும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்–மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற கதை அமைப்பில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே படத்துக்கு ‘யு’ சான்று தர முடியாது என தணிக்கை குழுவினர் மறுத்து விட்டனர். அதற்கு பதில் ‘யுஏ’ சான்று அளித்தார்கள்.

இதன் மூலம் இந்த படத்துக்கு அரசின் வரி விலக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தணிக்கை மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பி வைத்தனர். அங்கும் ‘யு’ சான்று கிடைக்கவில்லை.