Breaking News

காணமல் போனவர்களுடைய விபரங்களை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை

இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து காணமல் போனவர்களுடைய விபரங்களை ஆவணங்களுடன் அனுப்பிவைக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடமாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைதடி வடமாகாண சபை பேரவைச் செயலகம் மற்றும் வடக்கம்பரை சுழிபுரன் என்ற விலாசத்திற்கு மேற்படி ஆவணங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் போனவர்களுடைய விபரங்கள், புகைப்படங்கள், சரணடைந்த இடம், காலம், நேரம் போன்ற விடையங்களை உள்ளடக்கியும், காணமல் போனவர்கள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் காவல்துறையினரிடம் செய்த முறைப்பாடுகளின் பிரதிகள் அடங்கிய ஆவணங்களை அனுப்பிவைக்கவும்.

மேலும் காணமல் போனவர்களுடைய ஆவணங்களை அனுப்பிவைத்தாலும் அவர்கள் தொடர்பான நடவடிக்கை எடுப்பதற்கும் அவ்வாவணங்கள் ஏதுவாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.