Breaking News

ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்க மறுக்கும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்டவே இது தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

குறித்த தினத்தில் முன்னாள் ஜனாதிபதி ஆஜராகாமல் அவரது சட்டத்தரணியை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி தனக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளவர் தொடர்பிலான தகவல்களை அலசி ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பதவி வழங்கியமை மற்றும் கடந்த நாட்களில் ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.