Breaking News

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நாட்டின் வீரனை பாதுகாப்போம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷமெழுப்பி வருகின்றனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக உள்ள வீதியில் அவர்கள் அமர்ந்தவண்ணம் எதிர்ப்பினை வெளிப்படுத்திவருகின்றனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று (23) முற்பகல் சென்றுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணைக்குழுவிற்கு செல்ல முன்பதாக ஆணைக்குழுவிற்கு செல்லும் பிரதான நுழைவாயிலை மறித்து பெருந்திரளானவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நேற்று (22) தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.