Breaking News

புதிய தலைமைகளை தேடும் தமிழர்கள்


தமிழ் மக்­களின் அர­சியல் புதிய தலை­மை­யொன் றைத்தேடி தடு­மாறத் தொடங் கியிருக்கின்றதா என்ற சந்­தேகம் இப்போதைய அர­சியல் சூழலில் தலையெடுத்திருப்பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.


தேர்­தல்­களைப் பொறுத்­த­மட்டில், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பையே தமிழ் மக்கள் தமது தலை­மை­யாக வரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வீட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கின்­ற­வர்கள், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஊடாக முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டாலும், அவர்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்­த­வர்கள், எம்­ம­வர்கள் என்ற மன­நி­லையில் அவர்­க­ளுக்கு மக்கள் வாக்­க­ளித்து வரு­கின்­றார்கள். 

விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் தோற்றம் பெற்ற தமிழ்த் தே­சிய கூட்­ட­மைப்­புக்கே வாக்­க­ளிக்க வேண்டும் என்ற தேர்தல் கால கொள்­கையில் அவர்கள் இன்­று­வரை யுத்தம் முடி­வுக்கு வந்து ஆறு வரு­டங்கள் நிறை­வ­டையப் போகின்ற நிலை­யிலும் தொடர்ந்து இறுக்­க­மாக இருந்து வரு­கின்­றார்கள். தேர்தல் காலத்­திற்கு அவர்­க­ளுக்கு தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு என்ற ஒரு தலைமை இருக்­கின்­றது. 

ஆனால், பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்கும், அவற்றைத் தீர்த்துக் கொள்­வ­தற்­கு­மான சரி­யா­னதோர் அர­சியல் தலை­மைக்­காக அவர்கள் அலை­மோ­து­கின்­றார்கள். இதனால் இரட்டை நிலைப்­பா­டொன்றில் அவர்கள் சிக்கித் தவித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நகர சபைகள், மாந­க­ர­ச­பைகள், பிர­தேச சபைகள், மாகாண சபைகள், பாராளு­மன்ற அவை என பல­த­ரப்­பட்ட நிலை­க­ளிலும் பல மட்­டங்­க­ளிலும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையில் அவர்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் - மக்கள் தலை­வர்கள் இருக்­கின்­றார்கள். 

பணி­யாற்றி வரு­கின்­றார்கள். ஒட்டு மொத்­த­மான ஒரு நோக்கில் இந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஊடாக அல்­லது பாரா­ளு­மன்ற அவையின் ஊடாக அந்த மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக தீர்வு காணப்­பட்­டி­ருக்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. 

சில­பல அபி­வி­ருத்தித் திட்­டங்கள் அல்­லது பொது­மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மற்றும் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்கள் என்­ப­வற்றின் ஊடாக மக்கள் நன்­மை­ய­டைந்­தி­ருக்­கலாம். அந்தத் திட்­டங்கள் இந்த மக்கள் பிர­தி­நி­தி­களின் சபை­க­ளுக்கு ஊடாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கலாம். 

இல்­லை­யென்று மறுப்­ப­தற்­கில்லை. ஆனால், மோச­மான ஒரு யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்டு, அனை­த்­தையும் இழந்து, அடிப்­படை வச­தி­க­ளுக்­கா­கவும், அர­சியல் உரி­மை­க­ளுக்­கா­கவும் ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்ற மக்­க­ளு­டைய ஏக்­கத்தைப் போக்­கு­வ­தற்கு, அந்த மக்­களின் அபி­லா­சை­களை அர­சியல் ரீதி­யாக, அர­சியல் தலை­மைத்­து­வத்தின் ஊடாக நிறை­வேற்­று­வ­தற்கு இந்த மக்­க­ளுடைய பிர­தி­நி­திகள், ஓர­ணியில் ஒரே குரலில் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் கட்­டுப்­பாட்டில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளா­கிய நக­ர­சபை, மாந­க­ர­சபை, பிர­தேச சபைகள் என்­ப­வற்றில் குழப்­பங்­களும் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளை­யுமே காண முடிகின்றது. 

இந்த சபைகள் சரி­யான முறையில் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்த்து அபி­வி­ருத்தித் திட்­டங்­களை செவ்­வனே முன்­னெ­டுப்­பதில் ஒற்­று­மை­யாக மக்­களின் அபி­மா­னத்தைப் பெற்ற வகையில் செயற்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. உள்­ளூராட்சி சபை­க­ளுக்­குள்­ளேயே பிரச்­சி­னைகள் இருக்­கும்­போது, மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை அவர்கள் எவ்­வாறு தீர்க்க முடியும்? மக்­களின் பிரச்­சினை என்­பது பொதுப் பிரச்­சினை. தலை­வர்கள் அல்­லது மக்கள் பிர­தி­நி­திகள் எந்தக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் இருக்­கலாம். அவர்­களை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளாக தலை­வர்­க­ளாகவே மக்கள் நோக்­கு­கின்­றார்கள். 

இத்­த­கைய மக்­களின் நோக்கில் இந்தப் பிர­தி­நி­திகள் அல்­லது தலை­வர்கள் மக்­க­ளு­டைய பொதுப் பிரச்­சி­னை­களில் ஒற்­று­மை­யாக, ஒரே நோக்­கத்தில் - ஒரே இலக்கை நோக்கிச் செயற்­பட்­டி­ருப்­ப­தா­கவோ, செயற்­ப­டு­வ­தா­கவோ தெரி­ய­வில்லை. மக்கள் ஓர­ணியில் ஒற்­று­மை­யாகத் திரண்­டி­ருப்­ப­தற்கே விரும்­பு­கின்­றார்கள். யுத்தச் சூழல் கார­ண­மாக சாதா­ரண சமூகக் கட்­ட­மைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­ட­மைப்­புக்­களில் ஏற்­பட்­டி­ருந்த மாற்­றங்­க­ளை­ய­டுத்து, இந்த நிலை­மைக்கு மக்கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

தலை­மைகள் ஒரு போக்கு, மக்கள் ஒரு போக்கு யுத்­தத்­திற்கு முந்­திய காலத்தைப் போன்று அர­சியல் கட்­சி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து, அந்தக் கட்­சி­களின் விசு­வா­சி­க­ளாக பரம்­பரை, பரம்­ப­ரை­யாக கட்­சி­களின் வழி­வந்­த­வர்­க­ளாகக் கண்­மூ­டித்­த­ன­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு இன்று மக்கள் தயா­ராக இல்லை. யுத்தச் சூழல் கார­ண­மாக தமது வாழ்க்­கை­யையே தொலைத்­துள்ள அந்த மக்கள், அந்த வாழ்க்­கையை சரி­யான முறையில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தையே முழு நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அது மட்­டு­மல்­லாமல் தொடர்ச்­சி­யான ஒடுக்­கு­முறை ஆயு­த­ரீ­தி­யான அடக்­கு­மு­றை­களின் மூலம் நசுக்­கப்­பட்­டுள்ள அவர்கள் தமது நியா­ய­மான குடி­யு­ரி­மை­க­ளையும், அர­சியல் உரி­மை­க­ளையும் வென்­றெ­டுத்துக் கொள்ள வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கின்­றார்கள். 

பொது­மக்­க­ளு­டைய இந்த நோக்­கத்தைச் சரி­யான முறையில் புரிந்து கொண்டு அதற்­கேற்ற வகையில் காரி­யங்­களை ஒற்­று­மை­யாக முன்­னெ­டுக்­கின்ற போக்­கை அந்த மக்­க­ளு­டைய தலை­வர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை. நக­ர­சபை, மாந­க­ர­ச­பையில் இருந்து, பிர­தேச சபைகள் வரையில் மக்கள் பிர­தி­நி­தி­க­ளி­டையே மோதல்­களும் தனி­வழிப் போக்­கி­லான செயற்­பா­டு­க­ளை­யுமே காண முடி­கின்­றது. மாகாண சபை­க­ளி­லும்­கூட, சரி­யான தலை­மைத்­துவச் செயற்­பாட்டைக் காண முடி­யாத நிலை­மையே தொடர்­கின்­றது. 

இதனால் மக்­க­ளுக்கும் அந்த மக்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளா­கிய அர­சியல் தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் இடை­வெளி அதி­க­ரிக்­கத்­தொ­டங்­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. மக்கள் தமது தலை­வர்­களின் ஊடாகப் பிரச்­சி­னை­களை முன்­நி­லைப்­ப­டுத்தி அவற்­றுக்குத் தீர்வு காண்­கின்ற வழி­மு­றையில் இருந்து விலகி, தாங்­களே தமது பிரச்­சி­னை­க­ளுக்­காக வீதியில் இறங்கி போரா­டு­கின்ற ஒரு சூழல் - ஒரு போக்கு இப்­போது உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. தலை­வர்­களே மக்­க­ளுக்கு வழி­காட்­டு­வார்கள். அவர்­களை வழி­ந­டத்திச் செல்­வார்கள். ஆனால் தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில், மக்­க­ளுக்குப் பின்னால் தலை­வர்கள் செல்­கின்ற புதிய சூழல் தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றதா என்று வினவத் தோன்­று­கின்­றது. 

மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்­கான வீட்டுத் திட்­டங்கள், கிரா­மங்­க­ளுக்­கான வீதிகள், அடிப்­படை வச­திகள் போன்ற பிரச்­சி­னை­களை தமது தலை­வர்­களின் ஊடாக முன்­னி­லைப்­ப­டுத்தி தீர்வு காண முடி­யாது என்ற முடி­வுக்கு அவர்கள் வந்­து­விட்­டார்­களோ என்று கரு­தத்­தக்க வகை­யி­லேயே காரி­யங்கள் நடை­பெ­று­கின்­றன. பல இடங்­க­ளிலும் இதற்­காக மக்கள் தாங்­களே வீதி­களில் இறங்கிப் போராடத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். சிறிய அள­வி­லான இத்­த­கைய போராட்­டங்கள் யாழ்ப்­பாணம், வவு­னியா மற்றும் வன்­னிப்­பி­ர­தே­சங்­களில் தலை­யெ­டுத்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் குறித்த ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை பிற்­போ­டப்­பட்­ட­தை­ய­டுத்து, அதனைக் கண்­டித்தும், அந்த அறிக்கை முறை­யான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்தி யாழ்ப்­பா­ணத்தில் சிவில் சமூ­கத்­தி­னரே பெரிய அளவில் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். இந்தப் போராட்­டத்தில் அர­சியல் தலை­வர்­களும் இணைந்து கொண்­டி­ருந்­தார்­களே தவிர, அந்தப் போராட்­டத்தின் தலை­மையில் அதனை ஒழுங்­க­மைக்­கின்ற தலை­மைத்­துவச் செயற்­பாட்டில் அர­சியல் தலை­வர்­களின் பங்­க­ளிப்பைக் காண முடி­ய­வில்லை. 

ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யுடன் தொடர்­பு­டை­ய­தாக, உள்­ளக விசா­ர­ணையே நடத்­தப்­படும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு இட­மில்லை என்று புதிய அர­சாங்­கத்தின் அறி­வித்தல் கார­ண­மாகக் கொதிப்­ப­டைந்த மக்கள், உள்­ளக விசா­ர­ணையை, காணாமல் போன­வர்கள் தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையை, புறக்­க­ணிக்கப் போவ­தாக மேற்­கொண்ட தீர்­மா­னத்தில் அர­சியல் தலை­வர்­களின் வகிபாகத்­தைக்­காண முடி­ய­வில்லை. உள்­ளக விசா­ர­ணையைப் புறக்­க­ணிப்­பது என்று தீர்­மா­னித்­தது மட்­டு­மல்­லாமல் அந்தத் தீர்­மா­னத்தை, திரு­கோ­ண­ம­லையில் அவர்கள் உட­ன­டி­யா­கவே செயற்­ப­டுத்­தவும் தொடங்­கி­விட்­டார்கள். 

ஆனால் தலை­வர்கள் உள்­ளக விசா­ர­ணையைப் புறக்­க­ணிப்­பதா, வேண்­டாமா என்­பது குறித்து இன்னும் தீர்­மா­னிக்க முடி­யா­த­வர்­க­ளாக, அது குறித்து தீர்க்­க­மான முடிவை மேற்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். இது தொடர்பில் மக்­களை வழி­ந­டத்திச் செல்­லத்­தக்க வகை­யி­லான முடி­வையோ அல்­லது நிலைப்­பாட்­டையோ அர­சியல் தலை­வர்கள் வெளிப்­ப­டுத்­தாத ஒரு நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் நிலை என்ன? உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஒற்­று­மை­யாக மக்­களின் நலன்­களில் கவனம் செலுத்திச் செயற்­ப­டாத கார­ணத்­தினால் பல பிர­தேச சபைகள் நகர சபை என்­பன செய­லி­ழந்­தி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்ல. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் இணைந்­துள்ள கட்­சி­­களின் தலை­மைகள் மட்­டத்­தி­லேயும் இந்தப் போக்கு காணப்­ப­டு­வதே கவ­லைக்­கு­ரி­ய­தாக இருக்­கின்­றது. 

போதிய வெளிப்­படைத் தன்­மையும் பிரச்­சி­னைகள், விட­யங்கள் எது­வாக இருந்­தாலும் சரி­யாகக் கலந்­து­ரை­யா­டாத போக்கும், மனம்­விட்டு விட­யங்­களை விவா­தித்து முடி­வுக்கு வரு­கின்ற தன்­மையும் கட்சித் தலை­மைகள் மத்­தியில் காணப்­ப­ட­வில்லை. 

அர­சியல் கட்­சி­களின் கூட்டு அமைப்பு என்றால் கருத்து வேறு­பா­டுகள் இருக்­கத்தான் செய்யும். அவை இருக்­கக்­கூ­டாது என்­ப­தல்ல. போரினால் பாதிக்­கப்­பட்ட ஒரு சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் என்ற வகையில் இத்­த­கைய கருத்து வேறு­பா­டு­களை பரந்த மனப்­பான்­மை­யோடு மக்­களின் நலன்­க­ளுக்­காக விட்­டுக்­கொ­டுத்து, வேறு­பா­டு­க­ளுக்­கி­டை­யிலும் உடன்­பாடு கண்டு காரி­யங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அவ­சியம். 

பல்­வேறு வழி­க­ளிலும் அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள தமிழ் சமூ­கத்தின் நிலை­மையைக் கருத்திற் கொண்டு அந்த சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் செயற்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மாகும். பிடி­வாதப் போக்கும், விட்டுக் கெடுக்­காத தன்­மையும் இன்­றைய அர­சியல் சூழலில் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் மக்­க­ளுக்கும் பாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே வழி­வ­குக்கும் என்­பதை மறந்­து­வி­ட­லா­காது. 

குழம்­பிய குட்­டையில் கிடைத்­ததைப் பிடிக்­கலாம் என்று சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­வ­தற்கு பலர் இன்று சந்­தர்ப்­பத்­திற்­காகக் காத்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பல­வீ­ன­மான நிலையைப் பயன்­ப­டுத்தி சுய­லாப அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு வச­தி­யான சூழலை ஏற்­ப­டுத்தி விடக் கூடாது. யுத்த காலத்­தி­லும் ­சரி, யுத்தம் முடி­வுக்கு வந்­த­பின்­ன­ரும்­ சரி, மக்கள் நிதா­ன­மா­கவே இருந்­தார்கள். ஏமாற்று அர­சியல் பேர்­வ­ழிகள் குறித்து அவர்கள் விழிப்­பா­கவே இருந்து செயற்­பட்­டி­ருந்­தார்கள். 

ஆனால், அவர்கள் நம்­பிக்கை வைத்­துள்ள அர­சியல் தலை­வர்கள் தமக்குள் கருத்­து­மோ­தலில் ஈடு­பட்டு, தாங்­க­ளா­கவே ஒற்­று­மையைக் குலைத்து, மக்­களின் நம்­பிக்­கையை வீண­டிக்க முயற்­சிக்கக் கூடாது. அத்­த­கைய பாத­க­மான ஒரு சூழல் உரு­வா­கு­வ­தற்கு தலை­வர்­களின் செயற்­பா­டுகள் வழி­வ­குத்­து­விடக் கூடாது. மக்­களின் நம்­பிக்­கையைப் பெறு­வ­தென்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அது கடி­ன­மான காரியம். இருக்­கின்ற மக்­களின் நம்­பிக்­கையை இழந்­து­விட்டு அதனை மீளப் பெறு­வ­தென்­பதும் இல­கு­வான காரி­ய­மல்ல. இதனை தமிழ் மக்கள் ஏற்­க­னவே பல அர­சியல் தலை­வர்­க­ளுக்கு உணர்த்­தி­யி­ருக்­கின்­றார்கள். இதனை எச்­ச­ரிக்­கை­யாகக் கொண்டு மக்­க­ளு­டைய தலைமை நிலையில் இருப்­ப­வர்கள் செயற்­பட வேண்டும். 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து, புதிய அர­சாங்கம் தமிழ் மக்­களின் உணர்­வு­களைச் சரி­யாகப் புரிந்து கொண்டு செயற்­ப­டாத கார­ணத்­தினால் பல்­வேறு பிரச்­சி­னைகள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. ஆட்­சியைக் கைப்­பற்­றி­யுள்ள புதிய அர­சாங்கம், தேர்­த­லுக்கு முன்னர், தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான வாக்­கு­று­தி­க­ளையும் வழங்­கி­யி­ருக்­க­வில்லை. ஆனாலும், அந்த புதிய அர­சாங்கம் ஆட்சி அமைப்­ப­தற்குத் தேவை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்ள தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னைகள் குறித்து புதிய அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும், அவற்­றுக்குத் தீர்வு காண வேண்டும் என்று பெரிய அளவில் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றார்கள். தங்­களால் ஆட்­சிக்கு வந்­த­வர்கள் தங்­க­ளுக்கு நன்மை தரத்­தக்க வகையில் ஏன் செயற்­படக் கூடாது என்­பது அவர்­க­ளு­டைய கேள்­வி­யாக இருக்­கின்­றது.

பெரும்­பான்மை இன மக்­களை இலக்­காகக் கொண்டு 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­வைத்து ஆட்­சிக்கு வந்­துள்ள அர­சாங்கம், அந்த வேலைத்­திட்­டத்­திலும், 100 நாட்­களின் பின்னர் வரப் போகின்ற பொதுத் தேர்­தலில் எவ்­வாறு வெற்றி பெறலாம் என்ற சிந்­த­னை­யிலும் கூடிய கவ­னத்தைச் செலுத்திச் செயற்­பட்டு வரு­கின்­ற­போது, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­பதில் கவனம் செலுத்தும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. இருந்த போதிலும், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களே, நாட்டில் இன்று எரியும் பிரச்­சி­னை­க­ளாக வீரியம் பெற்­றி­ருக்­கின்­றன.

எனவே, அந்தப் பிரச்­சி­னைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மையும் பொறுப்­பு­மாகும். அதே­நே­ரத்தில் ஆட்சி மாற்­றத்தின்; மூலம் 100 நாள் அர­சாங்­கத்தை அரி­ய­ணையில் ஏறச் செய்­வ­தற்குக் கைகொ­டுத்த தமிழ் மக்கள் அடுத்த தேர்­த­லிலும் அந்த ஆத­ரவை வழங்க வேண்­டு­மானால், அந்த மக்­களின் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்தி, அவர்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்க வேண்­டி­யது புதிய அர­சாங்­கத்­திற்குக் கட்­டாயத் தேவை­யாக இருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி அதனை ஆட்­சியில் அமர்த்­திய தமிழ்த்­த­லை­மைகள், தமது மக்­களின் மன உணர்­வு­க­ளையும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் கால­மாக கஷ்­டங்­க­ளையும் நெருக்­க­டிகள், அடக்­கு­மு­றை­க­ளையும் எதிர்­கொண்­டி­ருந்த மக்கள், நாட்டில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றத்தின் மூலம், தங்­க­ளுக்கு சிறிய அள­வி­லா­வது நன்மை கிடைக்­காதா என்று ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பேரி­ன­வா­த­தத்தின் அழுத்தத்தில் சிக்கித் தவிக்­கின்ற புதிய அரசு, தமிழ் மக்­க­ளுக்குச் செய்­கின்ற காரி­யங்­களை மிகவும் நிதா­னத்­து­ட­னேயே செய்ய வேண்­டிய தேவை உள்­ளது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் சிக்­க­லான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டு­கின்ற அதே­நே­ரத்தில், தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­டத்­தக்க வகை­யி­லான நல்­லெண்ணச் செயற்­பா­டு­க­ளை­யா­வது முன்­னெ­டுக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் தலை­யாய கட­மை­யாகும்.

தமிழ் மக்கள் புதிய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு உத­வி­யாக வாக்­க­ளித்­தார்கள். அவர்­க­ளு­டைய தலை­வர்கள், நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள். புதிய ஆட்சி மலர்ந்­ததன் பின்­னரும், நல்­லெண்ண வெளிப்­பா­டாக, மக்­க­ளு­டைய விருப்­பத்தைக் கேளா­ம­லேயே, நாற்­பது வரு­டங்­க­ளாக கரி­நா­ளாகக் கடைப்­பி­டித்து புறக்­க­ணித்து வந்த நாட்டின் 67 ஆவது சுதந்­திர தினத்தில், தன்­னிச்­சை­யாகக் கலந்து கொண்­டி­ருந்­தார்கள். ஆனால் இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­களை மீளக் கைய­ளித்தல், அர­சியல் கைதி­களை விடு­தலை செய்தல் காணாமல் போயுள்­ள­வர்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுத்தல் போன்ற ஏதா­வது ஒரு விட­யத்தில் புதிய அர­சாங்கம் நல்­லெண்ண வெளிப்­பா­டாக சிறிய அள­வி­லா­வது ஏதா­வது ஒரு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருக்­கலாம். அது நடை­பெ­ற­வில்லை.

எனவே, விட்டுக் கொடுப்பின் மூலம், பல வழி­க­ளிலும் அர­சாங்­கத்­திற்கு நல்­லெண்­ணத்தை வெளிப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் அத்தகைய ஒரு செயற்பாட்டிற்கு அடியெடுத்துக் கொடுத்து, தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து நல்லெண்ண வெளிப்பாடாக சில விடயங்களைச் செய்வதற்கு ஏன் ஊக்குவித்திருக்கக் கூடாது? அத்தகைய ஒரு செயற்பாடானது, தமிழ் மக்களை ஆறுதலடையச் செய்திருக்கும். அத்துடன் தமது தலைவர்கள் மீது அவர்களுக்கு அபிமானம் அதிகரித்திருந்திருக்கும். தொடர்ச்சியான பாதிப்புகளுக்கு உள்ளாகிவந்த தமிழ் மக்களுக்கு இப்போது உறுதிமொழிகள் அவசியமில்லை.

பெரிய அளவில் இல்லாவிட்டாலும், மிகவும் சிறிய அளவிலாவது, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டத்தக்க வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையை புதிய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதனையே அவர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத்தக்க காரியங்கள் இடம்பெறுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எரிச்சல் ஊட்டு கின்ற வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ்த் தலைமைகளுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த உணர்வு வெளிப்பாடானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இருப்பை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதானது, ஏற்க னவே தமது அரசியல் தலைமைகள் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்கள் புதிய தலை மையை நோக்கி நகர்வதற்கு ஊக்குவிக்கவே உதவும் என்பதில் ஐயமில்லை. தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வு அல்லது தப்பான அபிப்­பி­யம் என்பவற்றை ஆரோக்கியமான கலந்துரையாடல்களின் மூலம் தீர்த்துக் கொண்டு முன்னேறிச் செல்வதே ஆரோக்கியமான அரசியல் செயற்பாடாக இருக்க முடியும். வெளிப்படைத்தன்மையற்ற போக்கும், நாங்கள் செய்வதே சரி, நாங்கள் செய்ததே சரி என்ற பிடிவாதப் போக்கும் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான, இடைவெளியை அதிகரிக்கவும், மக்கள் புதிய தலைமையை நோக்கிச் செல்வதற்கும் அவர்களை மேலும் ஊக்குவிக்கவே உதவும் என்பதில் சந்தேகமில்லை.