Breaking News

எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் வைக்க திட்டம் – மஹிந்த

எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சிறையில் தடுத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இது குறித்து பேசப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் சூழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சில கட்சிகளினால் ஆன தேசிய நிறைவேற்றுப் பேரவையின் கைகளில் மித மஞ்சிய அதிகாரம் காணப்படுவதாகத் தெரித்துள்ளார்.

எந்த வீட்டை சோதனையிட வேண்டும் யாரை கைது செய்ய வேண்டும் என்பது குறித்து காவல்துறை திணைக்களமோ புலனாய்வு பிரிவினரோ தீர்மானிப்பதில்லை எனவும் தேசிய நிறைவேற்றுப் பேரவையே இவற்றை தீர்மானிக்கின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராபஜக்ஸவை இன்னும் மூன்று வாரங்களுக்குள் கைது செய்ய உள்ளதாக தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் ஒருவருக்கு வழங்கிய அதிகாரத்தை வேறும் சில நபர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குரோத அரசியலுக்காக நேரத்தை விரயப்படுத்தாது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.