யாழில் இரண்டு இலட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கான இறுதிப்போராட்டம்!
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலைத்தடி நீர் மாச டைந்துள்ளது என்பது தொடர்பில் குழப்பகரமான அறிக்கைகளும் செய்திகளும் வெளியாகி வரு வதால்
இந்த சிக்கலில் வடமாகாண முதலமைச்சர், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண ஆளுனர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்றவர்கள் இதில் நேரடியாக தலையிடக்கோரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் எதிர்வரும் 07.05.2015 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் மக்கள் திரள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூய நீருக்கான பாதிக்கபட்ட மக்கள் ஒன்றியம்-இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம்-விதை குழுமம் போன்ற அமைப்புக்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன,அதேளை நீருக்காகப் போராடும் அன்பார்ந்த மக்களே! எமக்கான இறுதிச்சந்தர்ப்பம்! ஒன்று திரள்வோம் வெற்றி பெறுவோம்! என்றும் கோரியுள்ளனர்.








