Breaking News

நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் - மஹிந்த

பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.