Breaking News

இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்தியது அமெரிக்கா

இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப் பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.

இலங்கையில் தமது விஜயத்தை முடித்துக் கொண்ட அமெரிக்காவின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் துறையின் உதவிச் செயலாளர் டொம் மலிநௌஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.

வன்னியில் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்துக்கு சென்றபோது தமது உணர்வுபூர்வமான நிலை ஏற்பட்டது. இதனையடுத்து போரினால் இறந்த இரண்டு தரப்பினருக்கும் அங்கு இறுதிமரியாதை செலுத்தியதாக டொம் குறிப்பிட்டார்.