Breaking News

மன்னாரில் எண்ணெய் அகழ்ந்த நிறுவனம் வெளியேறியது

மன்னாரில் எண்ணெய் அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய நிறுவனம் அதில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தற்போது எரிதிரவத்தின் விலைகள் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் இந்த நிறுவனம் மேற்கொண்டு வந்த எண்ணெய் அகழ்வு பணிகளை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தியாவின் ராஜஷ்தால் எண்ணெய் அகழ்வினை மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தில் மாத்திரம் இந்த நிறுவனம் அவதானம் செலுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.