Breaking News

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் தடை!

 சுன்னாகம் பொலிஸ் பிரிவில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றில் சமர்பித்த அறிக்கை ஒன்றை பரிசீலித்த மல்லாகம் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ். உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.