Breaking News

பிரதமருடன் அரசியல் விளையாட்டிற்கு தயாரென்கிறார் டிலான்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க எம்­முடன் அர­சியல் விளை­யாட்­டுக்­களை நடத்­து­வா­ரானால் அவரை வீட்­டுக்கு அனுப்பும் வரை அர­சியல் விளை­யாட்­டுக்­களை நடத்­து­வ­தற்கு நாங்கள் தயா­ராகி இருக்­கின்றோம் என்றும் முன்னாள் அமைச்­சரும் சுதந்­திரக்கட்­சியின் பேச்­சா­ள­ரு­மான டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே டிலான் பெரேரா இதனை தெரி­வித்தார்.

‘அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக தேர்தல் முறையை மாற்­றிய அமைப்­ப­தற்கு எதிர்க்­கட்­சி­யி­லி­ருக்கும் நாங்கள் மிகத் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். ஆனால், தேர்தல் முறையை மாற்­று­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி பாரிய தடை­யாக இருக்­கின்­றது. தேர்தல் முறை மாற்­று­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரும் முழு­மை­யான ஆத­ரவு வழங்­குவோம் என்று ஏற்­க­னவே, ஜனா­தி­ப­திக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளோம். தற்­போது கூட ஜனா­தி­ப­திக்கு நாங்கள் இத­னையே வலி­யு­றுத்திக் கூறு­கின்றோம்.

ஆனால், பிர­தமர் ரணில்­ த­லை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியோ நாட்­டுக்குத் தேவை­யானவற்றை செய்­யாமல் தமது கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யா­ன­வற்­றையே செய்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தம் மற்றும் 20 ஆவது திருத்­தங்­களை நிறை­வேற்றும் நோக்­கி­லேயே நாங்கள் அர­சாங்­கத்­தி­லி­ருந்து இணைந்து அமைச்சு பத­வி­களை வகித்தோம். ஆனால், அந்த உய­­ரிய நோக்­கத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பணி­யாற்ற முடி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் ரீதியில் எம்­முடன் அர­சியல் விளை­யாட்­டுக்­களை நடத்­து­வா­ரானால் அவரை வீட்­டுக்கு அனுப்பும் வரை அர­சியல் விளை­யாட்­டுக்­களை நடத்­து­வ­தற்கு நாங்கள் தயா­ராகி இருக்­கின்றோம். அர­சியல் விளை­யாட்டை நடத்­து­வ­தற்கு எங்­க­ளுக்கும் தெரியும். மஹிந்த தரப்­பையும் மைத்­திரி தரப்­பையும் ஒன்­றி­ணைத்து எதிர்­வரும் தேர்­தலில் கல­மி­றங்கி ஐக்­கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு எங்களால் முடியும். அதனை நாங்கள் செய்வோம்.

ரணில் விக்கிரமசிங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் அரசியல் விளையாட்டை நடத்தினால் பதிலுக்கு அரசியல் விளையாட்டை நடத்த எமக்கும் தெரியும்’ என்றார்.