20வது திருத்தச் சட்டம் இம் மாதம் சமர்ப்பிக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 20வது திருத்தச் சட்டம் இம் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அமைச்சரவையில் எதிர்வரும் 13ம் திகதியும் பாராளுமன்றத்தில் இம் மாதம் 19ம் திகதியும் குறித்த திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேர்தல் முறை மாற்றங்களை உள்ளடங்கிய 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.