Breaking News

முதலாவது முயற்சியும் இரண்டாவது தோல்வியும்

ஜன­வரி மாதம் 8ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது 62 இலட்சத்துக்கும் அதிக மான மக்கள் தமது வர­லாற்று சிறப்பு மிக்க நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 


அன்­றைய தினத்தில் மக்கள் கொண்­டி­ருந்த தீர்­மா­னத்தால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்­டுக்கு அனுப்பி வைப்­ப­தற்கும் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்வதற்கும் அவரை உய­ரிய ஆச­னத்தில் அமரச்செய்­வ­தற்கும் வழி வகை ஏற்­ப­டுத்­தினர்.

பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய இன்­றைய ஜனா­தி­பதி மைத்­திரிபால­ சி­றி­சேன அன்­றைய சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ­ரது கூஜாக்­க­ளுக்கும் துரோ­கி­யாக காணப்­பட்டார். சுதந்­திரக் கட்­சியின் அனைத்து பிர­சார மேடை­க­ளிலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற மனிதர் மீது முட்டை அப்பம் கதை கூறி துரோகி பட்டம் சூட்டி அவ­ரது பெய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை வெட்ட வெளிச்­ச­மாகும். 

முதல் நாள் இரவு வேளையில் முட்டை அப்பம் சாப்­பிட்டு விட்டு மறு­நாளில் முதுகில் குத்­தி­யவர் என்ற வாச­கத்தை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­தி­ருந்தார். மஹிந்த ராஜபக்ஷ இவ்­வாறு கூறும் போது அவ­ரது ஆட்­க­ளாக செயற்­பட்டு வரு­ப­வர்­க­ளான மேற்­கூ­றப்­பட்­ட­வர்­களும் சும்மா இருப்­பார்­களா என்ன? அவர்­களும் மைத்­தி­ரியின் முகத்தில் கரியைப் பூசி தேர்­தலில் தோல்­வி­ய­டையச் செய்­வ­தற்கு படா­த­பாடு பட்­டனர்.

அது மாத்­தி­ர­மன்றி அடாதும் செய்­தனர். இருப்­பினும் பொறு­மையின் சிகரமாய் விளங்­கிய மைத்­திரி நாட்டின் தலை­வ­ருக்கே உரிய உய­ரிய பண்­பினை வெளிக்­காட்­டி­ய­வ­ராக தனது பய­ணத்தை மேற்­கொண்டார். அஹிம்சை வழி­யான அவ­ரது பயணம் நேரா­னதும் சீரா­ன­து­மான பாதையில் அமைந்­தி­ருந்­ததால் நாட்டு மக்கள் புரிந்து செயற்­பட்­டனர். மறு­பு­றத்தில் அதி­கா­ரத்தைக் கையில் வைத்­துக்­கொண்டு போட்­டி­யிட்ட மஹிந்த ராஜபக்ஷ தமிழ் பேசும் மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டதால் அவ­ரது வீழ்ச்சி உறு­தி­யா­னது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஒட்டு மொத்த வாக்­கு­க­ளாலும் தமிழ் பேசும் மக்­க ளின் வாக்­கு­க­ளாலும் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஜே.வி.பி. ஆத­ர­வா­ளர்­க­ளாலும் சுதந்­திரக் கட்­சியின் அதி­ருப்­தி­யா­ளர்­க­ளாலும் வெறுக்­கப்­பட்­ட­வ­ரானார். இத்­த­கைய நிரா­க­ரிப்பும் வெறுப்பும் இணைந்தே மஹிந்த ராஜபக்ஷ என்ற மனி­தரை அதி­காரம் இழக்கச் செய்­தன. இவ்­வாறு நாட்டின் பெரும்­பான்மை மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி மோகத்­தையும் பேரா­சை­யையும் மூட்டை கட்டி வைப்­பதை விடுத்து மீண்டும் ஒரு முறை இலங்கை அர­சி­ய­லுக்குள் அரியாசனத்தை அடை­யத்­து­டிக்­கின்றார். 

வடக்கு, கிழக்கு மக்கள், தோட்டத் தொழி­லா­ளர்கள் முஸ்லிம் மக்கள் என்ற தரப்­பி­ன­ருக்கு மேலாக இந்­நாட்டின் சிங்­கள சமூ­கத்­தையும் கூட அவர் ஏமாற்றி அர­சியல் வயிறு வளர்த்த தலைவர் என்ற நிலைக்கு பிர­ப­ல­மாகி விட்டார். இன்­றைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ குடும்­பத்­தா­ருக்கும் ஊழல் குற்றவிசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் இடையில் மிகப் பெரிய நெருக்கம் ஒன்று ஏற்­பட்­டுள்­ளது. தேர்தல் முடிந்த கையோடு விமா­னத்தில் ஏறிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலை­ம­றை­வாக இருந்த நிலையில் நாடு திரும்­பி­யதும் தற்­போது கம்பி எண்ணிக் கொண்­டி­ருக்­கின்றார். 

இது இவ்­வா­றி­ருக்க மஹிந்த ராஜபக்ஷ குடும்­பத்­தா­ருக்கு மாத்­திரம் வெளி­நா­டு­களில் 18 பில்­லியன் டொலர்கள் அள­வி­லான சொத்­துக்கள் இருப்­ப­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ரவீர தெரி­வித்­துள்ளார். மேலும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷவுக்கு எதி­ராக ஜே.வி.பி. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறை­யிட்­டுள்­ளது. 

இவ்­வா­றான குடும்ப பின்­ன­ணியைக் கொண்­டி­ருப்­ப­வ­ரான மஹிந்த ராஜபக்ஷ வைத்தான் இந்­நாட்டின் பிர­த­ம­ராக ஆக்­கி­விட வேண்டும் என்ற ரீதியில் அடி­வ­ருடி அர­சியல் செய்யும் சிலர் முனைப்புக் காட்டி வரு­கின்­றனர். மைத்­தி­ரியின் வெற்­றிக்கு நாட்டு மக்கள் துணை போயி­ருந்த அதே­வேளை மறு­பு­றத் தில் இன­வாத தீயில் குளிக்க விடப்­பட்­டி­ருந்த மக்கள் அதி­லி­ருந்து உட­ன­டி­யா­கவே வெளி­வர முடி­யா­த­வர்­க­ளாக இருந்து மஹிந்த ராஜபக் ஷவுக்கும் வாக்­க­ளித்­தனர். 

அதே போக்­கினை தக்க வைத்­துக்­கொள்ள வேண்டும் என்ற ரீதி­யில்தான் மஹிந்த ஆத­ர­வா­ளர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்த வரையில் வேட்பு மனு தாக்கல் செய்த நாளின் போது எதிர் வேட்­பாளர் மஹிந்த ராஜபக்ஷவை நேருக்குநேர் சந்­தித்த போதும் அதேநேரம் மஹிந்­தவே கைலாகு கொடுப்­ப­தற்கு முனைந்த போதும் மைத்­திரி அவ­ருக்கு ஒரு கும்­பிடு போட்டு நழு­விக்­கொண்­டார்.

மைத்­தி­ரியின் இத்­த­கைய செயற்­பா­டா­னது மஹிந்­தவின் கரங்­களைத் தொடு­வ­தற்கும் விரும்­பா­த­வ­ராக இருந்­துள்ளார் என்­பதை வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இன்­றைய அர­சியல் களத்தைப் பொறுத்த வரையில் முன்னாள் அமைச்­சர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, பந்­துல குண­வர்­தன உள்­ளிட்டோர் சிரேஷ்­டத்­து­வத்தைக் கொண்­டி­ருந்­தாலும் மஹிந்த இல்லா விட்டால் தாம் அர­சியல் அநா­தைகள் தான் என்­பதை நன்­றா­கவே ஊகித்­துக்­கொண்­டுள்­ளனர்.

அதே­போன்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத் தின் போது அமைச்­சர்­க­ளாக வலம் வந்து சுக­ போகம் அனு­ப­வித்­த­வர்கள் சம்­பளம் - கிம்­பளம் என்ற ரீதியில் சம்­பா­தித்­த­வர்கள் இன்று காய்ந்து கிடப்­பதால் மதம் பிடித்­த­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர். மஹிந்த ராஜ­பக்ஷ என்ற நபர் அதி­கா­ரத் தில் இருந்த போது ஐக்­கிய தேசியக் கட்சி பிள­வு­பட்­டது. அனு­தி­னமும் அக்­கட்­சிக்குள் பூசல்கள் உண்­டாகி அவை பூதா­க­ர­மா­கின. தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­பட்­டி­ராத நிலை­மை­யொன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக் குள் இருந்து வந்­தது.

இதனை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்ட முன்னாள் ஜனா­தி­ பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசியக் கட்­ சியை பிள­வு­ப­டுத்தி எம்­.பி.க்­களை வாங்­கினார். அதே­போன்று கட்­டுக்­கோப்­புக்கு இலக்­க­ண­மாக திகழ்ந்து வந்த ஜே.வி.பி.யை பிள­வு­ப­டுத்தி ஒரு பகு­தி­யி­னரை தனக்கு சாத­ கமாக்­கினார். அத்­துடன் நின்று விடாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் கூட விட்டு வைக்­கா­த­வ­ராக செயற்­பட்ட மஹிந்த ராஜ­பக்ஷ அக் கட்­சி­க­ளுக்­குள்ளும் பூசல்­களை ஏற்­ப­டுத்தி பிள­வு­ப­டுத்­தினார்.

இவ்­வாறு அனைத்து அர­சியல் கட்­சி­களும் பிள­வு­பட்டு சீர­ழி­வ­தற்கு கார­ண­மாக இருந்த மஹிந்த ராஜ­பக்ஷ தனது தாய்க்­கட்­சிக்குள் பூசல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பிள­வு­ப­டு­வ­தற்கும் பிர­தான காரண கர்த்­தா­வாக விளங்கி விட்டார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னைய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யது முதல் சுதந்­தி­ரக்­கட்சி இன்று வரையில் எதிர்­நோக்கி வரு­கின்ற அனைத்து வித­மான பிரச்­சி­னை­க­ளுக்கும் மஹிந்­தவே காரணம்.

அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள் வதிலும் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் சுகபோகம் அனுபவிப்பதிலும் மாத்திரமே குறிகொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவும் அவ ரது கூட்டாளிகளும் சுதந்திரக் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் சின்னா பின்ன மாக்கி வருகின்றனர். இப்­ப­டி­யான நிலை­யில்தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­லான சந்­திப்பும் ஏற்­பட்­டது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்த வரையில் அவர் இந்­நாட்டின் ஜனா­தி­பதி, அரச தலைவர், இந்­நாட்டு மக்­களின் தலை­வ­ராக உள்­ளவர். அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரு­மா­னவர். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவைப் பொறுத்­த­வ­ரையில் அவர் நாட்டு மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர். அது மாத்­தி­ர­மின்றி சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆலோ­சகர் என்ற பத­வியை மட்­டுமே கொண்­டுள் ளார். நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில் மைத்­திரி,- மஹிந்த சந்­திப்பு என்­பதும் அவர்கள் இரு­வ­ருமே உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்­பொன் றில் இணைந்து கொண்­டதும் மிகப்­பெ­ரிய கேலிக்­கு­ரிய விட­ய­மாக உள்­ளது.

முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன சுமார் ஒன்­றரை மணி நேரத்தை செலவிட்டிருக்க வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்க தேவை­யில்லை. இது ஒரு அற்­ப­மான விட­ய­மா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது. மஹிந்­தவின் முதுகில் ஏறி சவாரி செய்­வ­தற்கு சிலர் காத்து நின்று காய் நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றனர். மறு­பு­றத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இருப்­பதால் அக்­கட்சி பிள­வு­ப­டாது பாது­காக்க வேண்­டிய பொறுப்பில் உள்ளார். அதுவே அதற்­கேற்­ற­வா­றான நடவடிக்கைகளை எடுக்க வேண்­டிய நிலைக்கு அவர் தள்­ளப்­பட்­டுள்ளார்.

இந்நிலையில் மைத்திரி – சந்திரிகா கூட்டினை உடைப்பதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரா­ளு­மன்றத் தேர்தல் ஒன்று வரும்­போது அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் வெற்றி குறித்து மைத்­திரி வெளியில் கூறா விட்­டாலும் மன­துக்குள் இருக்­கவே செய்யும். அதே­போன்று தான் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஊழல் மோச­டி ­களை அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தா­கக்­கூறி மக்­க ளின் ஆணையைப் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளியில் முகம்­பார்த்து சிரித்துக் கொண்­டாலும் உள்­ளுக்குள் மஹிந்த ராஜ­பக்ஷ எனும் நப­ருக்கு பிரதான இட­மொன்றை வகிப்­ப­தி­லி­ருந்து வில­கியே இருக்­கக்­கூடும் என்று சிந்­திப்­ப­திலும் தவறு இருக்­காது.

மைத்­திரி எனும் நபர் தேர்­தலில் தோல்­வி­யுற்­றி­ருந்தால் அந்­நபர் மண்­ணுக்­குள்­ளேயே இருந்­தி­ருப்பார் என்ற கதையை மைத்­தி­ரியே பகி­ரங்க மேடையில் கூறி­யி­ருந்­த­மையை அவர் ஒரு போதும் மறந்­தி­ருக்­கவே மாட்டார். மறு­பு­றத்தில் தன்னை ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமரச் செய்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் மைத்­திரி மறந்து செயற்­பட்டு விட முடி­யாது. தாம் இருவரும் இணைந்து எவ்வாறு அரசி யல் காய்களை நகர்த்துகிறோம் என்பதை அண்மையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றிலும் ஜனாதிபதி மிக நாசுக் காக கூறியிருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­சார மேடை­களில் பேசிய போது மைத்­தி­ரிக்கு வாக்­க­ளி­யுங்கள் என்ற வார்த்­தைக்கு மதிப்­ப­ளித்தே ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மைத்­தி­ரிக்கு வாக்­க­ளித்­தனர். ஆகவே, ரணிலின் வார்த்­தையில் இருக்கும் சக்­தியை மைத்­திரி நன்­றாகப் புரிந்து கொண்­டி­ருப்பார். இவ்­வா­றான நிலை­யில்தான் நாட்டு மக் கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கே வாக்­க­ளித்­த­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கு­வ­தற்கு வாக்­க­ளிக்­க­வில்­லை­ என்றும் சுதந்­திரக் கட்­சி­யினர் கூறு­கின்­றனர்.

இவ்­வாறு கூறு­ப­வர்கள் அன்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்து அவரைத் தோற்­க­டிக்கச் செய்­வ­தற்கும் அதே­நேரம் மஹிந்த ராஜ­ப­க்ஷவை வெற்றி பெறச் செய்­வ­தற்கும் செயற்­பட்­ட­வர்­க­ளாவர். ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிருக்கா விட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இருப்­பினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக அறி­மு­க­மா­கிய முத­லா­வது ஊடக மாநாட்­டிலும் அதே நேரம் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

ரணிலை பிரதமராக்க மக்கள் விரும்பியிக்காவிட்டால் மைத்திரியும் வெற்றி பெற்றிருக்க மாட்டார். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே நாட்டு மக்­களும் வாக்­க­ளித்­தனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் தனது உறுதி மொழியை நிறை­வேற்­றி­யுள் ளார். அவ­ரது வாக்­கு­று­தியும் அது நிறை­வேற்­றப்­பட்­டதன் தாத்­ப­ரி­யத்­தையும் புரிந்­தி­ருந்தும் சிங்­கள மக்­களை மடை­யர்­க­ளாக்கும் செயற்­பாட்­டினை இன்­றைய சுதந்­திரக் கட்­சி­யி­னரும் மஹிந்த ஆத­ர­வா­ளர்­களும் தூக்கிப் பிடித்து பேசி வரு­கின்­றனர். எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளி­னது நிலைப்­பாட்­டி­னையும் அதேபோன்று மஹிந்த ஆத­ர­வா­ளர்­க­ளது நிலைப்­பாட்­டி­னையும் மிகத்­தெ­ளி­வா­கவே புரிந்து வைத்­துள்ளார்.

அத்­துடன் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டையில் தெளி­வான புரிந்­து­ணர்­வொன்றும் நீடித்து வரு­கின்­றது. நாடு பற்றி சிந்­திக்­கின்ற ஊழல் மோச­டி­களை வெறுக்­கின்ற அதே­போன்று நாட்டு மக்கள் மீது பற்று கொண்­டுள்ள அரச தலை­வர்­க­ளாக இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் திகழ்­கின்­றனர். கறை படி­யாத இவர்கள் அடுத்து வரும் புதிய பாரா­ளு­மன்­றத்­துக்கு நேர்­மை­யா­ன­வர்­க­ளையும் கற்ற சமூ­கத்­தி­ன­ரையும் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண் டு வரு­கின்­றனர்.

நல்­லாட்சி ஒன்றை ஏற்­ப­டுத்தும் பொருட்டே மைத்­திரி-, ரணில் கூட்டு ஸ்தாபிக்­கப்­பட்­டது. அப்­ப­டி­யானால் நாடு தூய்­மைப்­ப­டு த்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. நாடு தூய்­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மானால் ஊழல் மோச­டிகள் இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டு­வ­துடன் குற்­ற­ வா­ளிகள் தப்­பிப்­பி­ழைப்­ப­தற்கும் வழி­வ­குக்­கா­தி­ருத்தல் வேண்டும். அதன் அடிப்­ப­டை­யி­லேயே தற்­போ­தைய நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கி­றது. நல்­லட்­சியின் பய­ணத்தில் நாடு முன்­னோ க்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அர­சியல் வங்­கு­ரோத்து நபர்­களால் முட்­டுக்­கட்டை இடப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு இந்­நாட்டின் ஊழல்­வா­திகள், குற்­ற­வா­ளிகள், ஏமாற்­றுக்­கா­ரர்கள் அனைத்து தரப்­பி­ன­ரையும் மக்கள் அறிந்­துள்­ளனர். அதேபோன்­றுதான் மஹிந்த ராஜ­பக் ஷ குடும் பம் தொடர்­பிலும் புரிந்து கொண்­டுள்­ளனர். இருப்­பினும் இன­வா­த­மற்ற ஆட்­சி­யொன்று இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் மஹிந்த ஆத­ரவு தரப்­பி­னரால் அது மீண்டும் மீண்டும் முளை விட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அந்த வகையில் தான் நாட்டின் தலை­வ­ரான ஜனா­தி­ப­தியின் நேரத்தை வீண­டிக்கும் நிலை யில் மைத்­திரி - மஹிந்த சந்­திப்­பொன்றை ஏற்­ப­டுத்தி பித்­த­ லாட்ட அர­சியல் ஒன்றும் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது. மஹிந்­தவைப் பொறுத்த வரையில் அவர் இந்­நாட்டின் பிர­த­ம­ரா­கவும் இரு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யா­கவும் இருந்து எல்­லா­வற்­றை யும் அனு­ப­வித்­துள்ளார். ஓய்வு பெறும் வய­தையும் தாண்­டி­யுள்ள அவர் சுதந்­திரக் கட்­சியின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு சந்­தர்ப்­ப­ம­ளிக்­காது மீண்டும் அதி­கார ஆச­னத்தில் அமர நினைப்­பது பேரா­சை­யாகும்.

இரண்டு முறை ஜனா­தி­பதிப் பத­வி­யி­லி­ருந்தும் மூன்­றா­வது தட­வை­யா­கவும் நீடிக்க வேண்டும் என்ற பேரா­சை­யி­லேயே ஜனா­தி ­பதித் தேர்­தலை நடத்தி பதவி முடி­வுறும் காலத்­துக்கு முன்­ப­தா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ வீடு சென்றார். மீண்டும் அதே போன்­ற­தொரு பேரா­சை­யுடன் பிர­தமர் வேட்­பாளர் பதவி கேட்டு வந்த அவ­ருக்கு அது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மை­யா­னது மஹிந்த சந்­தித்த இரண்­டா­வது தோல்­வி­யா­கவே அமைந்து விட்­டது.

மைத்­திரி – மஹிந்­தவை இணைத்து ரணிலைத் தோற்­க­டிப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முத­ லா­வது முயற்­சியே இங்கு தோல்வி கண்டுள்ளது. இந்த தோல்விகரமான செயற்பாட்டில் ஜனாதிபதியை இணைத்துக் கொண்டமை யானது தேவையற்ற விடயமாகும். இதேவேளை மறுபுறத்தில் நோக்குவோமா னால் மைத்திரியினதும் ரணிலினதும் கரங்கள் இறுகப்பற்றியிருக்கின்றன என்பதை மஹிந்தவும் மஹிந்த ஆதரவாளர்களும் இன்னுமே புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

இறுதியில் ஜனாதிபதியின் நேரத்தை வீணடித்து மஹிந்தவுக்கு தோல்வியைப் பெற்றுக் கொடுத்திருப்பதுதான் மஹிந்த ஆதரவாளர்களது வெற்றியாகவும் இருக்கிறது. இவ்வாறான நிலையில் தான் நிராகரிக்கப்பட்டவர் பிரதமர் வேட்பாளர் பதவி கேட்பது தொடர்பிலும் அது நிராகரிக்கப் பட்டதாலும் அரசியல் தலைவர்கள் எள்ளி நகையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்க முயற்சிப்பதன் மூலம் இந்நாட்டை முன்னைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கே முயற்சிக்கப்படுகிறது.

இலங்கையை பொறுத்த வரையில் இனவாதம் இல்லாவிட்டால் இங்கு அரசியல் செல்வாக்கில்லை என்றதொரு நிலை சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் உள்ளது. அவர்களது அரசியல் பிழைப்புக்கு ஒரே ஆயுதமாகவும் மூலதனமாகவும் இருப்பது இந்த இனவாதம்தான். எனவே, இலங்கை அரசியல் விவகாரம் மற்றும் போக்குகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவடைந்திருப்பது குறைவாகவே உள்ளது.

அரசியல்வாதிகளின் மூடிமறைப்புக்களும் உண்மைத்தன்மையை அறிய விடாது முட்டுக்கட்டை இடுவதுமே இதற்கான பிரதான காரணமாகும். எப்படியிருப்பினும் மக்கள் தாமாகவே சிந்திக்க முற்படுபவர் களாக இருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் ஏமாறுபவர்களாக இல்லாது ஏமாற்று க்காரர்களுக்கு பாடம் புகட்டுபவர்களாக மாற வேண்டும்.

-ஜே.ஜி.ஸ்டீபன்