யாழில் நிலைமை கட்டுக்குள். 127 பேர் கைது. 5 பொலிசார் காயம்.(காணொளி)
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய
தாசந்தேகநபர்களுக்கெதிரான ஆர்ப்பட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் 127 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை 5 பொலிசார் காயம் அடைந்துள்ளனர்.
தாசந்தேகநபர்களுக்கெதிரான ஆர்ப்பட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் 127 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை 5 பொலிசார் காயம் அடைந்துள்ளனர்.
யாழ் நீதிமன்ற வளாகத்தில் நிலவிவரும் அசாதாரன நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிசார் கண்ணீர் புகை பிரயோகம், மேல்வெடி, மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்களும் தமது தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளாதமையினால் யாழ் நகரே கடும் பதட்ட நிலைக்குள்ளாகியுள்ளாகியது. யாழில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இவ்வாறான ஒரு பதட்டநிலை காண்ப்படுவது இதுவே முதல் தடவை என்பது குற்ப்பிடத்தக்கது. மேலும் நிலமையை கட்டுப்படுத்த பொலிஸாரின் சிறப்புப் படையணி வரவளைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.