Breaking News

யாழ்.நீதிமன்றை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் சிறச்சாலை, நீதிமன்ற வாகனங்களை அடித்து நொருக்கினர்

யாழ்.நீதீமன்றத்தை இருபுறமுமாக முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டடத்தை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். 

அத்துடன் சிறைச்சாலை வாகனம், நீதிமன்ற வாகனம் என்பவற்றையும் அடித்து நொருக்கினர். இதன்போது இரு பொலிஸார் காயமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் நேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டு தடியடியும் நடத்தினர். 

இதனால் நீதிமன்ற பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருபுறமும் குவிந்துள்ளனர். இதேவேளை, போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தினர் என்ற சந்தேகத்திர் 6 பேரைப் பொலிஸார் நீதிமன்ற வீதியில் வைத்துக் கைதுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.