Breaking News

மாணவி படுகொலை - யாழில் அனைத்து அமைப்புக்களும் போராட்டத்தில் குதிப்பு (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் குடாநாட்டின் அனைத்து அமைப்புக்களும் இணைந்து கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அரசே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு, இல்லையேல் எம்மிடம் கொடு, பெண்ணே விழித்திரு உலகம் உன் கையில், திட்டமிட்டு செய்த செயலை சாராயத்தின் மீது சுமத்த பொலிஸாரே இடமளியாதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு கண்'டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் அமைப்பு, இளைஞர் கழகம், குருக்கள், அருட்சகோதரிகள், பல்கலை மாணவர்கள், கியூடெக் நிறுவனம், மாதர் அபிவிருத்தி சங்கம் மற்றும் அனைத்து அமைப்புக்களும் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.