Breaking News

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம்?

வரும் புதன்கிழமை கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?


அதேவேளை, வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச்சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, வரும் 19ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20ம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவல்களை அரசியல் தலைவர்கள் பலரும் ஏற்கவோ நிராகரிக்கவோ இல்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் சரி, நிறைவேற்றப்படாது போனாலும் சரி, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதில் ஐதேக உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.