புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்
புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் தலைநகர், ஒஸ்லோவில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, முதலீடு மற்றும் உதவிகள் என்ற வகையில் இலங்கைக்கு உதவ அவர்கள் பலமான விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகத்தினரிடம் பெரியளவு வளங்கள் இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.