விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 37 பேரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்த போது தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றாண்டு கால இந்திய இலங்கை உறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தை ஊடாக மீனவ பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.