Breaking News

மாணவி படுகொலையுடன் தொடர்புடையோரை பாதுகாப்பது யார் என்பது விரைவில் அம்பலமாகும்

புங்­கு­டு­தீவு மாண­வியின் கொலை­யுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை பாது­காக்க தமிழ் மக்­களின் பாது­கா­வ­லர்கள் எனக் கூறிக்­கொள்வோர் முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். அவர்கள் யாரென்­பது விரைவில் அம்­ப­ல­மாகும் என ஈ.பி.டி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ர­குமார் முரு­கேசு நேற்று சபையில் தெரி­வித்தார்.

உயர் கல்வி மாண­வர்­க­ளுக்கு பியர் வழங்கி தேர்தல் பிர­சா­ரங்­களை மேற்­கொள்ளும் நிலைமை வடக்கில் தோன்றி­யுள்­ளது. இதற்­கான ஆதா­ரங்கள் உள்­ளன என்றும் அவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற கல்­வி­ய­மைச்சு தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே சந்­தி­ர­குமார் முரு­கேசு எம்.பி இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் புங்­கு­டு­தீவு மாணவி பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்ட சம்­ப­வத்­துடன் சுவிஸ் பிர­ஜை­யொ­ரு­வரும் தொடர்­பு­பட்­டுள்ளார். அவரை பாது­காக்­கவும் விடு­தலை செய்­யவும் தமி­ழர்­களின் பாது­கா­வ­லர்கள் எனக் கூறிக்­கொள்வோர் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இந்தச் சம்­ப­வத்­துடன் சட்­டத்­துறை நிபுணர் ஒரு­வரும் தொடர்­பு­பட்­டுள்ளார். இவ்­வா­றான ஒரு கொடூரம் இனி எந்­த­வொரு மாண­விக்கும், பெண்­ணுக்கும் இடம்­பெ­றக்­கூ­டாது. இந்த கொடூ­ரத்­திற்கு எதி­ராக மக்கள் எழுச்சி கண்டு வீதியில் இறங்கி போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளனர். வடக்­கிலும் கிழக்­கிலும் இவ் எழுச்சி தலை­தூக்­கி­யுள்­ளது.

வடக்கில் இடம்­பெற்ற மக்கள் எழுச்­சியின் போது சில சக்­திகள் பொதுச் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்­துள்­ளன. மக்கள் எழுச்­சியை கொச்சைப்­ப­டுத்தும் விதத்தில் பொதுச் சொத்­துக்­களை சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் யாரென்­பதை விரைவில் வெளி­யி­டுவோம். குற்­ற­வா­ளி­களை தப்­பிக்க வைக்க முயற்­சிப்­ப­வர்கள் யாரென்­ப­தையும் வெளி­யி­டுவோம்.

வடக்கில் தேர்தல் காலங்­களில் உயர்­தர மாண­வர்­க­ளுக்கு பியர் வழங்கி தேர்தல் பிர­சா­ரங்கள் மேற்­கொள்­வது பின்­ன­ணியில் உள்ளோர் தொடர்­பாக ஆதா­ரங்கள் உள்­ளன. வடக்கு முதல்­வரும், மாகாண சபை கல்வி அமைச்­சரும் பாட­சாலை வைப­வங்­களில் கலந்து கொண்டு அர­சியல் பேசு­கின்­றனர்.

கிராம பாட­சா­லை­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­குறை உள்­ளது. பற்­றாக்­குறை உள்­ளதை மக்கள் வடமாகாண முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் முறையிட்டால் அதனை தீர்த்து வைக்காது பிள்ளைகளை நகரப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கூறுகின்றனர். இது தான் வடக்கின் இன்றைய கல்வி நிலை என்றார்.