Breaking News

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அண்மையில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவுக்கு முன்னால் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஞானசார தேரருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினம் ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யுமாறு நீதவான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.