விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்
தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அப்படத்தின் வெற்றி, அவரை இசையமைப்பு மட்டுமல்லாது, நடிப்பு ஆசையும் அதிகரித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து சலீம் படத்தில் நடித்தார். சலீம் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றது. சலீம் படத்தின் வெற்றி்யை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை, விஜய் ஆண்டனியே இயக்கப்போக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற “நாக்க முக்க” பாடல், சிறந்த கமர்ஷியல் பாடலுக்கான கேன்ஸ் கோல்டன் லயன் விருது பெற்றுள்ளது.
இந்த விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் ஆண்டனி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாக்க முக்க பாடல், 2011ம் ஆண்டில் நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்கவிழாவில், இசைக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.