Breaking News

போராட்டங்களை வன்முறைகளாக தூண்டிவிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் - மாவை

புங்­கு­டு­தீ­வு­ மா­ண­விக்­கு­ நீ­தி­கோ­ரி ­ந­டை­பெற்­று வந்­த­ அ­மைதிப் போராட்­டங்­களைக் களங்­கப்­ப­டுத்தும் வகை யில் வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வதில் சில­சக்­திகள் ஈடு­பட்­டுள்­ள­மை­யை­ வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

என மாவை சேனா­தி­ராசா எம்.பி. வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

நேற்றுக் காலை யாழ். மாவட்டச் செய­ல­கத்­திற்­கு­ முன்னால் புங்­கு­டு­தீ­வு­ மா­ண­விக்­கு­நீ­தி­கோ­ரி­ அ­மை­தி­வழிப் போராட்­டத்­திற்­கு ­அ­ணி­தி­ர­ளு­மா­று­ த­மிழர் ஆசி­ரியர் சங்கம், யாழ். வணிகர் கழகம் மற்றும் பல்­க­லைக்­க­ழ­க­ ச­மூகம், மாணவர், இளை­ஞர்­

அ­மைப்­புக்கள் அழைப்­பு­வி­டுத்­தி­ருந்தன. பெரு­ம­ளவில் பல­து­றை­க­ளையும் சேர்ந்த அ­றி­ஞர்கள் மத­கு­ருமார், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்கள், பெண்கள் அணி­தி­ரண்­டி­ருந்­தனர். காலை 11.00 மணி­ய­ளவில் ஊர்­வ­லங்கள் வந்­த­ு சேர்ந்­தன. அந்­த­வே­ளை­களில் அந்­த­ பெ­ருந்­தி­ர­ளான கூட்­டத்தின் முன்னால் பலபேர் மோட்டார் சைக்­கிள்­களில் தீவி­ர­வி­சை­யுடன் சென்­ற­தை ­அ­வ­தா­னித்­து­அச்­ச­ம­டைந்தோம். உடன் தமிழர் ஆசி­ரியர் சங்கச் செய­லாளர், மற்றும் யாழ். வர்த்­த­க­சங்கத் தலை­வ­ரிடம் ஏற்­ப­டக்­கூ­டி­ய வி­ப­ரீதம் பற்றிக் கலந்­து­ரை­யா­டினோம். இந்­த­ நீ­திக்­கா­ன­ போ­ராட்­டத்­தை ­மு­தல் ­நா­ளிலும் வன்­மு­றைக்­க­ள­மாக்­க­மு­யற்­சிகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யையும் ஆராய்ந்தோம் . பின் பொறுப்­பா­ன­வர்­க­ளை­ஒ­ழுங்கைக் கடைப்­பி­டிக்­கும் ­ப­டி­ கோ­ரிக்­கை­ வி­டுக்­கப்­பட்­டது.

வன்­மு­றை ­நி­கழ்­வுகள் இடம் ­பெ­றாமல் தடுக்கும் நோக்­கிலும் கட்­டுப்­பா­டற்­ற ­ந­ட­வ­டிக்­கை­களில் சில ­சக்­திகள் நடந்­து­ கொள்­வ­தை­ கட்­டு­ப­டுத்தும் வகை­யி­லும்­அ­மை­தி­யா­ன­ போ­ராட்டம் நல்­லெண்­ணத்­துடன் நடை­பெற்­ற­பொ­ழுதும் விரை­வா­க­ மு­டி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன.

நீதி­கோ­ரி­ அ­ர­சிடம் விடுக்­கப்­பட்­ட ­வேண்­டுகோள் ஆவ­ணங்கள் அவ­ச­ர­மா­­கை­ய­ளிக்­கப்­பட்­டது. பின்னர் சில­ சக்­திகள் யாழ். நீதி­மன்றக் கட்­ட­டத்­தையும் வழக்­க­றி­ஞர்­க­ளையும், வாக­னங்­க­ளையும் தாக்­கியும் கல்­லெ­றிந்தும் வன்­மு­றை­க­ளி­லீ­டு­பட்­ட­தா­க­அ­றிந்தோம். பொலிசார் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் செய்­து­ க­லகச் சூழலைக் கட்­டுப்­ப­டுத்­த­மு­யற்­சிகள் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் அறிந்­த­ பொ­ழு­து ­வே­த­னை­ய­டை­கின்றோம்.

கைது­செய்­யப்­பட்­ட­ ஈ­னச் ­செயல் புரிந்­த­கொ­லை­யா­ளி­களைத் தங்கள் கைகளில் தர­வேண்­டு­மென்­று ­வன்­மு­றையில் ஈடு­ப­டு­வ­து­ அந்­த ­மா­ண­விக்­கு­ அத்­த­கை­ய­ ஈ­னச்­செ­யல்­க­ளுக்­கு­ நீ­தி கி­டைக்­காமற் போவ­தற்கே இச் ­செ­யல்கள் இட்டுச் செல்­ல­ மு­யற்­சிக்­கப்­ப­டு­கி­றதா? என்­ற­கேள்­வி­ எ­ழு­கின்­றது. இந்­த ­நி­லையில் வன்­முறைச் சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­த­ பொ­லிசார் போதா­தென்றும் இரா­ணு­வத்­தை ­அ­ழைக்­க­ வேண்­டி­ய­ அ­வ­சியம் ஏற்­பட்­டு­ விட்­ட­தாகப் பொலிஸ்­மா­அ­திபர் கரு­து­வ­தா­க­ அ­றிந்து, எம­து­த­லைவர் சம்­பந்தன்,இரா­ணு­வத்­தை­ ஈ­டு­ப­டுத்­த­வேண்­டாம் ­எ­னக்­கோ­ரி­யுள்­ளார். இது தொடர்­பா­க­என்­னுடன் தொடர்­பு­க­ளை­ ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார். நானும்­ இ­ரா­ணு­வத்­தை­ மீண்டும் மக்கள் மத்­தி­யில் பா­து­காப்­பு­ என்னும் பெயரில் அழைக்­க­வேண்­டா­மெனக் கேட்­டுள்ளேன்.

இந்­த ­சம்­ப­வங்­க­ளை­ எல்லாம் மறைத்­து­ விட்டு­ உண்­மைக்­கு­மா­றா­ன­ செய்­திகள் சிலரால் பரப்­பப்­பட்­டுள்­ளன. இதனையிட்டு மனம் வருந்துகிறோம். யாழ்.தெருக்களில் பலமோட்டார் வண்டி களில் இளைஞர்கள் பலர் மிகத் தீவிரமாகச் செல்வதை அவதானித்தோம். அவர்கள் யாரென்று அறியமுடியவில்லை. இதைப் போன்று எங்கள் வாழ் நாளில் எத்தனையோ போராட்டங்களையும் பேரழிவுகளையும் அனுபவித்துவிட்டோம்.

நன்றி உள்ள மக்களும் இளைஞர்களும், மாணவர்களும் அநீதிக்கெதிராகபேரெழுச்சி கொண்டு அணிதிரண்டது எழுச்சியைத்தந்தது. ஆனால் இதனைப் பொறுக்காத உள்நோக்கங் கொண்டசக்திகள் வன்முறையைத் தூண்டியும், ஈடுபட்டும் வருவது வேதனை தருகிறது. எனவே அமைதிவழியில் நாம் போராடு வோம். நீதிமன்றங்களை நீதி வழங்கி அக் கொலை காரர்களுக்கு உச்சத்தண்டனை கிடைக்க வழிவகுப்போம். நீதிமன்றைக் கூடத் தாக்கும் வன்முறைவேண்டாம்.வன்முறையில் ஈடுபடவேண்டாம் மீண் டும் ஒருபேரழிவுக்கு இட்டுச் செல்ல யாருக்கம் இடமளிக்கவேண்டாம் என வேண்டுகிறோம்.