Breaking News

"வித்­தி­யாவின் படு­கொ­லையை கண்­டித்து இன்று வவு­னி­யாவில் முழுக்­க­டை­ய­டைப்பு"

யாழ்ப்­பாணம், புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா சிவ­லோ­க­நாதன் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தைக் கண்­டித்து இன்று வியா­ழக்­கிழமை வவு­னி­யாவில் முழுக் கடை­ய­டைப்பு செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தாக வர்த்­தக சங்கம் அறிக்கை விடுத்­துள்­ளது.

அவ் அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

யாழ்/புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சி. வித்­தியா மிகக் கொடூ­ர­மான முறையில் வன்­புணர்வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­மையைக் கண்­டிக்கும் முக­மா­கவும் இறந்த மாண­விக்கு அனு­தாபம் தெரி­வித்தும் இன்று வியா­ழக்­கிழமை வவு­னி­யாவில் முழுக் கடை­ய­டைப்புச் செய்ய வுவு­னியா வர்த்­தகர் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இந்தப் படு­கொ­லையில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சட்ட நட­வ­டிக்கை மூலம் கடு­மை­யான தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்­ப­துடன் இனி­வரும் காலங்­களில் இது போன்ற கொடூர வன்­செ­யல்கள் நடை­பெறா வண்ணம் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும் வவு­னியா வர்த்­தகர் சங்கம் கோரிக்கை விடுக்­கின்­றது.

யாழ்/புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி செல்வி.சி. வித்­தியா படு­கொலை இலங்கை சரித்­தி­ரத்தில் மறக்க – மன்­னிக்க முடி­யாத ஒரு கொடூரம். இச்­சம்­பவம் இலங்கை பாட­சாலை மாண­வர்கள் சமூ­கத்தில் ஒரு கறுப்­புப்­புள்ளி.

ஆகையால் இலங்கை நீதித்­துறை சட்ட வல்­லு­னர்கள் மற்றும் கல்­வி­மான்கள் என அனைத்­துத்­த­ரப்­பி­னரும் ஒன்­றி­ணைந்து கவ­னத்­தி­லெ­டுத்து இலங்கை அர­சியல் சட்­டத்தில் மேல­திக கடும் நட­வ­டிக்­கையை சேர்த்துக்கொள்ளும் முகமாக மாணவி வித்தியா சட்டம் என்ற பெயரோடு செயற்பட நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டுமென்று வவுனியா வர்த்தக சங்கம் ஒரு முன்மொழிவை முன் வைக்கிறது.