இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க பா.ஜ வலியுறுத்தல்
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனநாயக முறையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு பாரதிய ஜனதாக் கட்சி இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாக, தமிழக பா.ஜ கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை ஜெயராஜின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த இல கணேசன், கொழும்பில் இருந்து சென்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் யுத்தத்தால் சுமார் 80, 000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு சுயதொழில் பயிற்சிகளை வழங்க இலங்கை அரசிடம் யோசனை முன்வைத்துள்ளதாகவும் பா.ஜா குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.