யாழ்.பல்கலை மாணவர்கள் மீது வாள் வெட்டு! மேலும் இரு சந்தேக நபர்கள் கைது!
மானிப்பாய் பகுதியில் கடந்த மாதம் 25ஆம் திகதி இரவு இசைநிகழ்ச்சியொன்றை பார்த்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூன்றுபேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்ற சந்தேகத்தில் மேலும் இருவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அளவெட்டிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரையும் இன்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.