அமெரிக்கா அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை – என்கிறார் மைத்திரி
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக, அமெரிக்காவிடம் இருந்து தமது அரசாங்கம் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே அமெரிக்கா விரும்புகிறது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி குறிப்பிட்டதையும், இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை எந்த நாட்டுடன் உறவு வைத்திருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஜோன் கெரி கரிசனையோ கவலையோ வெளியிடவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.