பஸில் உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட நால்வர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும திணைக்கள பணிப்பாளர், சாரதி ஆகியோர் இன்று கடுவெல நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் நால்வரையும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற ஊழல்களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பஸில் உட்பட நால்வரும் கடந்த மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டர்.