தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகார பகிர்வுடன் கூடிய புதிய யாப்பு அவசியம்!
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை போன்ற அம்சங்கள் உள்ளடங்கிய புதிய அரசியல் யாப்பு ஒன்று அவசியம் என 19வது திருத்தச்சட்ட உருவாக்க சபையின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டம் அதிகார பரவலாக்கம் குறித்து அமையவில்லை என்றும் இந்த அரசியல் அமைப்பை கொண்டு செல்ல முடியாது என்றும் புதிய அரசியல் திருத்தம் அவசியம் என்றும் இந்த அரசியல் யாப்பு பல தடவைகள் திருத்தச் செய்யப்பட்ட ஒன்று என்றும் ஜயம்பதி விக்ரமரத்ன இந்திய ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள யாப்பு மனித உரிமை விடயத்தில் சிறந்த முன்னேற்றம் கொண்டுவரும் என்றும் அரசியல், சிவில் மாத்திரமன்றி சமூக பொருளாதார உரிமைகளையும் வலுப்படுத்துவதாக அமைவதாகவும் தெரிவித்த ஜயம்பதி, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் போது ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என கூறியுள்ளார்.