Breaking News

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் விபரம் இதோ!

அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப் பட்டுள்ளனர்.  இதன்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவகவும் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தெரிவுசெய்யப் பட்டுள்ளனர். 

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் பெயரிடப்பட்டுள்ளார். 

மேலும் அரசியல் சாரத மூவரும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இந்த சபையின் அதிகாரபூர்வ உறுப்புரிமையை பெற்றவர்களாவர். அரசியலமைப்புச் சபையில் 10 உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.