யாழ்.கோண்டாவில் விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த சினியர் ஞானசேகரம் (வயது 53) என்பவர் பலாலி வீதி ஊடாக சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் நின்ற பொலிஸார் இவரை அழைத்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை மீறி வீதியில் நின்றவர்கள் மீது மோதியுள்ளது. இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனினும் பொலிஸார் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்