Breaking News

யாழ்ப்பாணம் ஆர்ப்பாட்டத்தால் முடங்குறது‬

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணம் ஆர்ப்பாட்டத்தில் மிதக்கிறது. வர்த்தக நிலையங்கள் பூட்டப்படுகிறது. சில கடைகள் திறந்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கல்வீச்சுக்கும் உள்ளாகியுள்ளது. அத்துடன் ஏனைய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் பூட்டப்படுகிறது.

மேலும் மாணவிக்கு நீதி கோரி கண்டன பேரணி சென்றவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தை முற்கையிட முயன்றதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை நாளைய தினம் பேருந்துச் சேவைகள் இடம்பெறாது எனவும் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.