Breaking News

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அஞ்சல் ஓட்டத்தைபோன்றது - அரியம் எம்.பி

தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

பலர் தற்போது ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால் நான் அதை ஒருபோதும் எற்றுக்கொண்டதில்லை என்னை பொறுத்தவரை அகிம்சை போராட்டத்தின் வெற்றியே ஆயுதப்போராட்டமாக மாறியது தற்போது ஆயுதப்போராட்டத்தின் வெற்றிதான் இராஜதந்திரப் போராட்டமாக மற்றமடைந்துள்ளது. அதாவது பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அஞ்சல் ஓட்டத்தைபோன்றது. அதாவது ஏற்கனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் பின்னர் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டு ஆயுதப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்து தற்போது அது ராஜதந்திரப் போராட்டமாக சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்களின் போராட்டம் ஒரு அஞ்சல் ஒட்டத்தை போன்று தந்தை செல்வாவிடமிருந்து பிரபாகரனிடமும், பிரபாகரனிடமிருந்து தற்போது சம்பந்தன் ஐயாவிடமும் கைமாறப்பட்டுள்ளது என்றார்.