நாட்டின் பெரிய கள்ளர்கள் ஐ.தே.காவிலேயே உள்ளனர்! - குமார வெல்கம
ஐக்கிய தேசியக் கட்சியிலேயே நாட்டின் பெரிய கள்ளர் இருக்கின்றார் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை கள்ளர் என சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும் நாட்டின் பெரிய கள்ளர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றார். அவர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும். நான் சிறந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர். 33 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறிமா பண்டாரநாயக்கவிடம் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு விலகிச் சென்றதில்லை. சந்திரிக்கா, அனுர பண்டாரநாயக்க, மைத்திரி கட்சியை விட்டுச் சென்ற போதிலும் நாம் செல்லவில்லை. எனவே கட்சியைப் பற்றி பேசும் உரிமை எமக்கு உண்டு.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்று மஹிந்த ராஜபக்சவையே ஆதரிக்கின்றனர். மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என அண்மையில் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.