விரைவில் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகலாம்
சில அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தில் நிலவும் நிலையற்ற அரசியல் மற்றும் பொருளாதாரமே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இணையவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் கூட்டமைப்புடன் விரைவில் இணையத் தயாராகவுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.