Breaking News

மகிந்தவை சந்திக்க மாட்டேன்! மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் மீண்டும் நேரடி கலந்துரையாடல்கள் இடம்பெறாதென ஜனாதிபதி செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்சவுடன் நேரடி கலந்துரையாடல்கள் மீண்டும் இடம்பெறாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம், சமகால ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவிடம் கூறவேண்டிய அனைத்தும் முதல் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுவதற்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியல் ரீதியில் பலமடைய இடமளிக்க கூடாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்