Breaking News

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலை யில் உள்ளது.

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளின் படி, ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி 316 ஆசனங்களையும், தொழிற்கட்சி 239, ஸ்கொட்டிஸ் தேசியக் கட்சி 58 ஆசனங்களையும், லிபரல் ஜனநாயக கட்சி 10 ஆசனங்களையும், கைப்பற்றும் என்று பிபிசி எதிர்வு கூறியிருந்தது.

இதன் படி 650 பேர் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாது என்றும், மீண்டும் கூட்டணி அரசாங்கமே பதவியேற்கும் வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது.

எனினும், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகளில், தொழிற்கட்சி கூடுதல் ஆசனங்களுடன் முன்னணியில் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள 60 தொகுதிகளின் முடிவுகளில், 22 தொகுதிகளை தொழிற்கட்சி கைப்பற்றியுள்ளது. 11 தொகுதிகளை மாத்திரம் கொன்சர்வேட்டிவ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஏனைய தொகுதிகளை சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

இலங்கையர்கள் போட்டியிடும், ஹரோ ஈஸ்ட், ரூசிலிப், நோர்த்வூட், மற்றும் பின்னர், வடகிழக்கு ஹம்செயர், கேம்பிரிஜ், ஆகிய தொகுதிகளின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.