Breaking News

அச்சுறுத்திய மகிந்தவை வெளியே போகச்சொன்ன மைத்திரி – அம்பலமாகும் சந்திப்பு இரகசியம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

இருதரப்பு கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்காக நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தினால், விரிசல்கள் இன்னும் அதிகமானதே இதற்குக் காரணம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

நேற்றைய பேச்சுக்களின் ஒரு கட்டத்தில், கூட்டத்தில் இருந்து வெளியேறப் போவதாக மகிந்த ராஜபக்ச எச்சரித்த போது, அதற்கு மைத்திரிபால சிறிசேன, தேவையானால் அவர் வெளியே போக முடியும் என்று கூறிவிட்டதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மைத்திரிபால சிறிசேன, பேச்சுக்களுக்குச் சென்றது அவர் பற்றிய மோசமான எண்ணங்களைத் தோற்றுவித்திருப்பதாகவும், எனவே மேலதிக பேச்சுக்கள் நடக்காது என்றும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.