ஐ.பி.எல். கிண்ணத்தை வென்று சம்பியனானது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக் கிடையிலான எட்டாவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்து. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. சிமென்ஸ் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 8 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றார். றோகித் சர்மா 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பெளண்டரிகள் அடங்கலா 50 ஒட்டங்களைப் பெற்றார். பிராவோ 4 ஓவர்கள் பந்து வீசி 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
203 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டுவிக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. ஸ்மித் ஒரு சிக்ஸர் 9 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து வந்த வீரர்கள் எவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். மெக்லநகன் 4 ஓவர்கள் பந்து வீசி25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகனாக றோஹித் சர்மா தெரிவானார்.