Breaking News

தற்போதைய தேர்தல் முறையிலேயே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் - ஜனாதிபதி


புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான யோசனை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் தற்­போ­துள்ள விகி­தா­சார தேர்தல் முறையின் படியே நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­துள்ளார்.

சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் சிறு­கட்­சி­களின் தலை­வர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று மாலை கொழும்­பி­லுள்ள அவ­ரது பிரத்­தி­யேக வாசஸ் தலத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே அவர் இவ்­வாறு உறு­தி­மொழி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எதிர்­வரும் 13ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் புதிய யோச­னையை முன்­வைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யி­லேயே சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சி­களின் தலை­வர்­களை நேற்று மாலை சந்­தித்து ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இந்தச் சந்­திப்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், ஜன­நா­யக மக் கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன், தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் அக்­கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான

ரவூப் ஹக்கீம், நிஸாம் காரி­யப்பர், ஜே.வி.பி.யின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் ஹமீத் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர். இந்த கலந்­து­ரை­யா­டலில் புதிய தேர்தல் முறை மாற்­ற­மா­னது எந்த வகை­யிலும் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடக் கூடாது என்­ப­தையும் சிறு­பான்மை கட்சி தலைவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

 மாவட்ட ரீதி­யாக தேர்தல் நடத்­தப்­ப­டும்­போ­துதான் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் உறு­திப்­ப­டுத்­தப்­படும். தொகுதி முறையில் நடத்­தப்­பட்டால் பாதிப்பே ஏற்­படும். புதிய தேர்தல் முறையில் பல் அங்­கத்­துவ தொகுதி முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். வடக்கு கிழக்கு வெளியே இந்த முறைமை அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன் இரட்டை வாக்குச் சீட்டு முறைமை அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். வேட்­பா­ள­ருக்கும் கட்­சிக்கும் வாக்­குக்­களை வழங்கும் வகையில், இந்த முறைமை அமை­வது நல்­லது என்று சிறு­பான்­மை­யின கட்­சி­களின் தலை­வர்கள் இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

நாட்டில் வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்கை 75 இலட்­ச­மாக இருக்­கும்­போதே தேர்தல் தொகு­திகள் மீள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. தற்­போது நாட்டில் தேர்தல் தொகு­திகள் மீள் நிய­மனம் செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மா­ன­தாகும். ஆனால், வடக்கில் யுத்­தத்­தினால் மக்கள் பெரும் இடம்­பெ­யர்­வு­களை சந்­தித்­துள்­ள­மை­யினால் அங்கு தொகுதி மீள் நிர்­ண­யத்தை தற்­போ­தைக்கு செய்யக் கூடாது. யாழ்ப்­பா­ணத்தில் 11 தொகு­திகள் உள்­ளன. அங்கு தொகு­தி­களை மக்­களின் தொகைக்­கேற்ப குறைக்­காது தொடர்ந்தும் அதனை பேணு­வ­தற்கே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இதேபோல் யுத்­தத்தால் பவா­திக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு இந்த முறை கடைப்­பி­டிக்­கப்­பட வேண்டும் என்றும் கட்சித் தலை­வர்கள் இந்த சந்­திப்பில் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இதனை விட தேர்தல் முறையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் அந்த முறைமை தொடர்பில் மக்­க­ளுக்கு உரிய விளக்­கங்கள் அளிக்­கப்­பட வேண்டும் இதனால் தேர்தல் முறையில் மாற்றம் செய்­யப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தற்­போ­தைய விகி­தா­சார முறைப்­ப­டியே நடத்­தப்­பட வேண்டும் என்றும் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் தலை­வர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அடுத்து வரும் பொதுத் தேர்தல் தற்போதுள்ள விகிதாசர தேர்தல் முறையின் அடிப்படையிலேயே நடத்தப்படும். அது குறித்து எவரும் சந்தேகங் கொள்ளத் தேவையில்லை. ஆனால், மக்களுக்கு வாக்குறுதி அளித்தப்படியே தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.