மகிந்த ஒரு பொம்மலாட்டக்காரன் - ஹரின் குற்றச்சாட்டு
ஒரே நாளில் சில பொம்மை அமைச்சர்கள் ராஜினாமா செய்வதும் , பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி வாசுதேவ நாணாயக்கார அவமானப்படுத்த முனைந்ததும் தற்செயலாக நிகழ்ந்தவையில்லையென கூறியு ள்ளார்.
ஊவா மாகாண முதல்வர் ஹரின் பெர்னான்டோ. இப்படியான மட்டரகமான நடவடிக்கைகளை பின்னாலிருந்து இயக்குவது, அபேராமயில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மஹிந்தவை விட்டு ஜனாதிபதி மைத்ரிபால விலகி பொது வேட்பாளராக உருவானதன் ஆறு மாத நிறைவையொட்டியே போலி ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில் இவ்வாறு நடந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.