Breaking News

வித்தியாவின் படுகொலையை வைத்து இனவாதம் பரப்பும் மஹிந்தவின் செயற்பாடுகளை கண்டிக்கிறோம்!

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொ­லையை வைத்து இன­வாதம் பரப்பும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்­பா­டு­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். 

சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி வடக்கை மீண்டும் அடக்­கு­முறை பகு­தி­யாக மாற்ற முயற்­சிப்­ப­தா­கவும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. வித்­தி­யாவின் படு­கொ­லை­யினால் மக்­களின் நியா­ய­மான கோபத்தை வன்­மு­றை­யாக மாற்ற சிலர் முயற்­சிக்­கின்­றனர். இதன் பின்­ன­ணியை உட­ன­டி­யாக கண்­டு­பி­டிக்க வேண்டும் எனவும் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யது.

வித்­தி­யாவின் கொலை தொடர்பில் தற்­போது ஏற்­பட்­டி­ருக்கும் அர­சியல் குழப்­பங்கள் மற்றும் இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் கூறு­கையில்,

வித்­தி­யாவின் படு­கொலை இன்று இலங்­கையில் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆரம்­பத்தில் இந்த கொலைச் சம்­பவம் வடக்கு ,கிழக்கு மற்றும் தமிழர் பிர­தே­சங்­களில் மட்­டுமே கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் இப்­போது இது தலை­நகர் முதற்­கொண்டு அனைத்து பகு­தியில் உள்ள மக்­களின் கவ­னத்­துக்கும் வந்­துள்­ளது. 

மக்கள் கிளர்ந்­தெ­ழுந்து இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வது மனித உரி­மையை கட்­டி­யெ­ழுப்பும் ஒரு விட­ய­மாகும். இவ்­வா­றான சம்­பவம் நாட்டில் எந்தப் பகு­தியில் யாருக்கு ஏற்­பட்­டாலும் அது நாட்டு மக்கள் அனை­வ­ரையும் பாதித்­து­விடும். ஆகவே இந்த போராட்­டத்தின் மூல­மாக நாடு முழு­வதும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். 

இந்த மாண­வியின் கொலை மிகவும் கொடூ­ர­மா­ன­தொன்­றாகும். இம் மாண­வியை கொலை­செய்த விதம், சம்­பந்­தப்­பட்ட நபர்கள், அவர்­களின் செயற்­பா­டுகள் என அனைத்­துமே மக்கள் மத்­தியில் கோபத்­தையும் வெறுப்­பி­னையும் தூண்­டி­யுள்­ளது. மனி­தா­பி­மா­ன­மற்ற ஒரு செயலை செய்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக மக்கள் கொந்­த­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் இருந்து சமூகம் முற்­று­மு­ழு­தாக மாற­வேண்­டு­மாயின் மக்­களின் எழுச்சி மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். அதன் விளைவே ஜனா­தி­பதி நிலை­மை­களை உணர்ந்­த­வ­ராக வடக்­குக்கு சென்று இந்த விடயம் தொடர்பில் நீதி நிலை­நாட்­டப்­ப­டு­மெ­னவும், குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்றும் வாக்­கு­றுதி கொடுத்­து­விட்டு வந்­துள்ளார். இதுவே எமது நாட்டில் நடக்கும் இறு­தி­யான மோச­மான சம்­ப­வ­மாக இருக்க வேண்டும் என்­பது தான் எமது கோரிக்­கை­யாகும்.

கேள்வி: வித்­தி­யாவின் படு­கொ­லையை இன­வாத அர­சியல் ரீதியில் முன்­னெ­டுத்து செல்­கின்­றனர். இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன?

உண்­மை­யி­லேயே இவ்­வா­றான சம்­ப­வங்கள் மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரா­ன­தொரு செயற்­பா­டாகும். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் குற்றச் செயலை கண்­டித்து ஒரு வார்த்தை கூட கூறாமல் இவ்­வா­றான மனி­தா­பி­மா­ன­மற்ற செயலில் அர­சியல் இலாபம் தேடவும், மிகவும் கீழ்த்­த­ர­மான வகையில் இன­வா­தத்தை தூண்­டி­வி­டவும் நினைப்­பது வருந்­தத்­தக்க விட­ய­மாகும். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக செயற்­பட்­டவர் இவ்­வா­றான இன­வாதம் பரப்பும் செயல்­களை மேற்­கொள்­வதும் வடக்கில் மீண்டும் அடக்­கு­மு­றை­களை மேற்­கொள்ள தூண்­டு­வ­தையும் நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

கேள்வி : வடக்கில் மக்­களின் ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில் அர­சியல் சூழ்ச்­சிகள் இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளதே இது உண்­மையா ?

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யா­வுக்கு நடந்த கொடூரச் செயற்­பாட்டால் மக்கள் தமது நியா­ய­மான கோபத்தை வெளிக்­காட்டி மிகவும் ஒழுங்­கான முறையில் இந்த ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். ஆனால் அவற்றை வன்­மு­றை­யாக மாற்றி அதன் மூல­மாக நடக்­க­வி­ருக்கும் அடுத்­த­கட்ட விட­யங்­க­ளையும் நடக்­காமல் தடுக்கும் சூழ்ச்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. 

ஒழுங்கு செய்­யப்­பட்ட மக்கள் எழுச்சி செயற்பாடுகளில் வன்முறைகளை தூண்டுகின்ற செயற்பாடுகள் மேற்கொண்டுதான் நீதி மன்றம் மீது கற்கள் வீசியதும் வேறு விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் நியாயத்தை கோரி எழுந்து நிற்கும் நிலைமையில் அதை தடுக்கும் வகையில் செயற்படுவது மிகவும் மோசமானதொரு செயற்பாடாகும். இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இதன் பின்னணியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்.