கோட்டாபயவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தன்னை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மனு மீதான விசாரணை முடியும்வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யக் கூடாதென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.