Breaking News

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு சுயாதீனமாகவே இயங்குகிறது - பிரதமர் அலுவலகம் அறிக்கை

பொலிஸ் நிதி மோசடி குற்ற விசா­ரணைப் பிரிவு மற்றும் ஊழல் மோசடி தடுப்புக்குழு உள்­ளிட்ட சட்­டத்தை பாது­காக்கும் பிரி­வு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணைகள் அனைத்தும் சுயா­ தீ­ன­மா­ன­­வை­யா­கவே அமையும். நாட்டில் சட்­டத்தை நிலை­நாட் டும் போது எந்­த­வொரு அர­சியல் தலை­யீ­டு­ம் இடம்­பெ­றாது என அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. 

மேலும் பொலிஸ் நிதி மோசடி குற்ற விசா­ரணை பிரி­வையோ ஊழல் மோசடி தடுப்பு குழு­வையோ அமைச்­ச­ர­வையின் உப குழு் நிர்­வ­கிப்­ப­தில்லை. பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குள்ள அதி­கா­ரங்கள் தவிர்ந்த வேறு எந்­த­வொரு அதி­கா­ரமும் நிதி மோசடி விசா­ரணை பிரி­விற்கு கிடை­யாது என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிதி மோசடி குற்ற விசா­ரணை பிரிவு மற்றும் ஊழல் மோசடி தடுப்பு குழு தொடர்பில் பிர­தமர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் ஊழல் மோசடி அதி­க­ரித்த கார­ணத்­தி­னா­லேயே பொலிஸ் நிதி மோசடி குற்ற விசா­ரணை பிரிவு ஸ்தாபிக்­கப்­பட்­டது. பொலிஸ் கட்­டளை சட்­டத்தின் பிர­கா­ரமே இந்த பிரிவு ஸ்தாபிக்­கப்­பட்­டது. பொலிஸ் திணைக்­க­ளத்தின் கீழ் 64 பிரிவு ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவு உள்­ளிட்ட பிரி­வுகள் இதில் உள்­ள­டங்­கு­கின்­றன.

பொலிஸ் திணைக்­க­ளத்தின் ஆரம்­பக்­கா­லப்­ப­கு­தியில் இவ்­வா­றான பிரிவு காணப்­ப­ட­வில்லை. மாறாக நாட்டின் தேவை­யினை கருத்திற் கொண்டே இவ்­வா­றான பிரி­வுகள் நிறு­வப்­பட்­டன. இது போன்றே நிதி மோசடி விசா­ரணை பிரிவும் நிறு­வப்­பட்­டது.. இந்த பிரி­வு­க­ளுக்கு பொலிஸ் திணைக்­க­ளத்­திற்­குள்ள அதி­கா­ரங்கள் தவிர்ந்த வேறு எந்­த­வொரு அதி­கா­ரமும் கிடை­யாது

ஊழல்,மோசடி தடுப்பு குழு என்ற அமைச்­ச­ரவை உப­கு­ழு­வா­னது ஜன­வரி 21 ஆம் திக­தியே அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் ஸ்தாபிக்­கப்­பட்­டது. எதிர்­கா­லத்தில் ஊழல் மோச­டி­க­ளி­லி­ருந்து நாட்டை பாது­காக்கும் நோக்­கு­டனே இந்த குழு நிய­மிக்­கப்­பட்­டது. இதற்­கென பிரத்­தி­யே­க­மான முறையில் அலு­வ­லகம் ஒன்றும் நிறு­வப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இவ்­வா­றான சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்­க­ளையோ விசா­ரணை பிரி­வு­க­ளையோ அமைச்­ச­ர­வையின் உப குழு நிர்­வ­கிப்­ப­தில்லை. நிதி மோசடி உள்­ளிட்ட விசா­ரணை பிரி­வு­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­களை வாரம் தோறும் விரி­வான முறையில் ஆரா­யப்­ப­டு­கி­றது.

நிதி மோசடி குற்ற தொடர்­பான விசா­ரணை பிரிவு உள்­ளிட்ட சட்டத்தை பாதுகாக்கும் ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்தும் சுயாதீனமானது். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டில் சட்டம் நிலைநாட்டும் விடயத்தில் ஒரு போதும் அரசியல் தலையீடுகளும் ஏற்படாது என பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.