Breaking News

சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்­கான கத­வு­களை திறக்கவே கெரி வந்தார் ! வசந்த பண்­டார குற்றச்சாட்டு

உள்­ளக விசா­ரணை என்ற பெயரில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்­கான கத­வு­களை திறந்து விடவே ஜோன் கெரி இலங்கை வந்தார். என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

கெரியின் விஜயம் இலங்­கையின் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்துவதற்கு அமெ­ரிக்­கா மேற்கொண்ட பங்­க­ளிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தெ­னவும் அவ்­வி­யக்கம் மேலும் தெரி­வித்துள்ளது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார  தெரி­விக்­கையில்,

உள்­ளக விசா­ர­ணைகள் என்ற பெயரில் இலங்கை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்­கான கத­வு­களை திறந்து விட்­டுள்ள ஜோன்கெரியின் விஜ­ய­மா­னது நாட்­டுக்கு பயங்­க­ர­மான ஆபத்­தான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். தமது பங்­க­ளிப்­பு­ட­னேயே இங்கு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது என்­ப­த­னையும் அவ்­வாறு ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­சாங்­கத்­திற்கு தனது வாழ்த்­துக்­களை தெரி­விப்­ப­தற்கும் மறு­புறம் உள்­ளக விசா­ர­ணை­க­ளுக்கு அழுத் தம் கொடுக்­க­வுமே கெரி இங்கு வந்தார்.

இதற்கு முன்­ப­தாக இங்கு வந்த அமெ­ரிக்க ராஜாங்க திணைக்­க­ளத்தின் உய­ர­தி­கா­ரி­யான கிலவிறொவிஸ் இலங்கை இறு­திக்­கட்ட போர் தொடர்­பாக தனக்கு கிடைத்த சாட்­சி­யங்­களை உள்­ளக விசா­ர­ணை­க­ளுக்கு வழங்­கு­வ­தாக தெரி­வித்தார். இது வேறொன்­று­மல்ல. சர்­வ­தேச விசா­ரணைப் பொறியில் எம்மை சிக்க வைப்­ப­தற்­கான அமெ­ரிக்­காவின் மூலோ­பா­யமே ஆகும். அது மட்­டு­மல்­லாது வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­க­ள­வு­ட­னான ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கெரி தமி­ழர்­க­ளுக்கு எதிரான யுத்தம் எனத் தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக மங்கள சமரவீர எதுவிதமான எதிர்ப்பையும் வெளி யிடவில்லையென்றும் டாக்டர் வசந்த பண் டார தெரிவித்துள்ளார்