Breaking News

அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை

அரச நிறுவனங்களில் இலவச WiFi வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவிக்கின்றது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இலவச WiFi வலயங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிலையத்தின் திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிடுகின்றார்.

பொலிஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் தரிப்பிடங்கள் போன்ற மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தற்போது இலவச WiFi சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களில் சேவையைப் பெற்றுக்கொள்ளும் மக்களும் இந்த இலவச WiFi சேவையினூடாக மேலும் நன்மையடையக் கூடும் எனவும் அவர் கூறினார்.