யாழ். நீதிமன்ற தாக்குதல்! 15 மாணவர்களுக்கு பிணை
யாழ், நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 47 சந்தேகநபர்கள் இன்று (09) யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் 15 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 32 பேர் எதிர்வரும் 18ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு அவர்களில் 12 பேர் தலா 5 லட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளிலும் மூன்று பேரை தலா 2 லட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவித்து நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.








