Breaking News

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சைகள் திணைக்களம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. மேலும் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளதால் மீண்டும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மீள ஆரம்பமாகி செப்டம்பர் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. 

 இதேவேளை, 5 ஆம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார குறிப்பிட்டார்.